ஸ்ரீ கைலாஸநாதர் கோயில் வரலாறுவரலாற்றில் புகழ்பெற்ற நல்லூரில் ஆகம மரபை அடியொற்றி எழுச்சி பெற்றதே ஸ்ரீ கைலாஸநாதர் கோயிலாகும்.

நல்லூர் யாழ்ப்பாணத்துத் தமிழ் மன்னர்களின் காலத்தில் சிறப்புப்பெற்ற தலம் என்பதை ‘ஈழநன்மண்டலஞ்சேர் பொன்னுலகம்’ என்றும் ‘பிறவிப்புன்மை இருள் நீக்கும்பதி’ என்றும் சேனாதிராசா முதலியார் தமது ‘நல்லூர் வெண்பாவில்’ புகழ்ந்து கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நல்லையம்பதி ஒரு கோயில் நகரமாகும்.

நல்லையம்பதியில் கீழ்த்திசைக்கண் வெயிலுகந்த பிள்ளையார் கோவிலும், தென்திசைக்கண் கைலாசபிள்ளையார் கோயிலும், மேற்றிசைக்கண் வீரமாகாளி அம்மன் கோவிலும், வடதிசைக்கண் சட்டநாதர் கோவிலும் அணிசெய்கின்றன. இவற்றின் நடுவே கந்தப்பெருமானது ஆலயம் உள்ளது. இவ்வாலயங்கள் சூழவிளங்கும் நல்லையம்பதியில் எழுச்சிபெற்றதே ஸ்ரீகைலாஸநாதர் ஆலயம் என்ற நல்லூர் சிவன் கோவிலாகும்.

இக்கோயில் இருக்கும் வளவு தமிழ் மன்னர் காலத்தில் ‘மின்னெறிஞ்சான் வளவு’ என்று அழைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விடம் ஒரு காலத்திற் போர்க்களமாகவும் விளங்கியதென அறியமுடிகின்றது. இவ்வாலய வரலாறு பற்றியறிவதற்கு வட்டுக்கோட்டை ‘நாவன்னா’ என அழைக்கப்படும் நாவன்மைமிக்க சிவஸ்ரீ நா.சிவசுப்பிரமணிய சிவாசாரியார் (1848-1929) ஆயிரத்து அறுநூறு விருத்தப்பாக்களிற் பதினேழு சர்க்கங்களையுள்ளடக்கி உருவாக்கிய ‘ஸ்ரீகைலாஸநாதர் புராணம்’ எனும் இக்கோயிற்றலபுராணமும், இவ்வாலய ஸ்தாபகர் சிவஸ்ரீ ந.வெ.கார்த்திகேயக் குருக்களின் தருமசாதனமும் ஆதாரங்களாக அமைகின்றன.

நல்லூர் சிவன் ஆலய ஸ்தாபகரும் அவரின் சிறப்புக்களும்

தென்னிந்தியாவின் காஞ்சிபுரத்திலிருந்து இலங்கைகக்கு வந்து குடியேறி இந்நகரில் வேதசிவாகம அறிவில் மேம்பட்ட அந்தணர் பரம்பரையொன்று சிறப்புற்று இருந்து வந்துள்ளது. அவ்வரிசையில் திகழ்ந்தவரே நல்லூரைச்சேர்ந்த சிவஸ்ரீ ந.வெ.கார்த்திகேயக் குருக்கள் (1876-1942) நல்லூர் கந்தசுவாமி கோவிலைத் தாபித்து பூஜித்துவந்த கிருஷ;ணையர் பரம்பரையிற் கிருஷ;ணையர் மகன் சுப்பையர். இவர் மகன் கிருஷ;ணையர், இவர் மகன் கணபதி ஐயர் மகன் வெங்கடேசஜயர் சுந்தரம்பா தம்பதியரின் புதல்வரே நல்லூர் சிவன் கோவிலின் ஸ்தாபகர், காச்யபகோத்திரத்தில் உதித்த சிவஸ்ரீ ந.வெ.கார்த்திகேயக் குருக்கள்.சேர்.பொன்.இராமநாதன் அவர்களுக்கு குருவாக மட்டுமன்றிச் சோதிடராகவும் திகழ்ந்து தெய்வமென மதிக்கப்பெற்று வந்த தம்பையாக் குருக்கள் என்ற சிறப்பு நாமத்துடன் விளங்கிய குருக்கள், கொழும்பு, கொச்சிக்கடை பொன்னம்பலவாணேசர் கோவிலில் முப்பது வருடங்களுக்குமேற் பிரதம குருவாக இருந்ததோடு, பொன்னம்பல வாணேசர் கருங்கற் புனருத்தாரணம், திருநெல்வேலி பரமேஸ்வரன் கோவில் நிர்மாணம் ஆகிய சிவப்பணிகளைச் செய்வதற்கு சேர்.பொன்.இராமநாதன் அவர்களுக்கு உறுதுணையாக விளங்கியவர்.

நல்லைக் கந்தசுவாமி கோயில், முன்னேஸ்வரம் தேவஸ்தானம்,  திருக்கேதீஸ்வரம், ஜிந்துப்பிட்டி, சிவசுப்பிரமணிய கோவில், திருகோணமலை காளி கோயில், வட்டுக்கோட்டைக் கண்ணலிங்க சுவாமி கோவில், நவாலி சிந்தாமணி விநாயகர் கோயில் முதலாக இலங்கையின் பல்வேறு ஆலயங்களிற் பிரதிஷ;ட குருமணியாகவும், திகழ்ந்து மனம் ஒருபங்குடக் கிரியைகள் இயற்றுவதில் வல்லவராகச் சிவஸ்ரீ ந.வெ.கார்த்திகேயக் குருக்கள் விளங்கினார். அவர் தமது வாழ்நாளிற் பெற்ற சிவப்பெற்றின் பயனாகவும், அயரா உழைப்பின் சின்னமாகவும் ‘பூலோக கைலை’ என நல்லூர் ஸ்ரீ கைலாஸநாதர் கோவில் எனும் நல்லூர் சிவன்கோவில் சிறப்படைந்தது. நல்லூர் சிவன் கோவிலின் ஆலய அமைப்பிற்குரிய கல்வளவை வாங்கியது முதலாக பதவிந்யாசம், வாஸ்துசாந்தி, கர்ப்பநியாசம் எனும் கிரியைகள் ஒழுங்காக நடைபெறுவதிலும், சிவப்பணிகளை முன்னெடுப்பதிலும் குருக்களுக்குச் சேர்.பொன்.இராமநாதன் அவர்களது உதவி கிட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கது. சிவஸ்ரீகார்த்திகேயக் குருக்கள் அவர்கள் தாம் தேடிய பொருளைச் சிவாலயப் பணிக்காகச் சிவார்ப்பண சிந்தனையுடன் கோவில் அமைப்பதற்குப் பயன்படுத்தினர்.

சேர்.பொன் இராமநாதன், குருக்கள் அவர்களது சிவாலயத் திருப்பணித் தொண்டில் மனந்திருப்தியுற்று, சுண்ணக்கற்களாலும் சலவைக்கற்களாலும் அமையவிருந்த அப்பணிக்குத் தேவையான சிறந்த கருங்கற்களை இந்தியாவிலிருந்து வருவித்து, மனம் மகிழ்ந்து உவந்தளித்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும். இராட்சத வருடம் ஆனி மதாம் பதின்மூன்றாம் திகதி 1915 ஜீன் மாதம் 27ஆம் திகதியில் பாலாலயம் கிழக்குமுகமாக அமைக்கப்பட்டுப் பிரதிஷ;டை செய்யப்பட்டிருந்தது. ஒரு வருடகால அவகாசத்திற்குள் வடக்கு நோக்கியதான மூலாலயம் அமைக்கப்பட்டு 1916 ஜீன் 26ஆம் திகதியில் அனாவர்த்தன கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டது.இவ்வாலயத்தில் அனாவர்த்தன கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். அனாவர்த்தன கும்பாபிஷேகம் நடைபெற்ற காலத்துக் கோவிலின் அமைப்பில் வட்டவடிவான விமானத்துடன் சிவனின் கருவறையுடனும், சதுரவடிவான விமானத்துடனும் அம்பாளின் கருவறையுடனுமாக வெண்பொளி கற்களாலனதும், கருங்கல் அடித்தளங்களுடன் கூடியதும், சுண்ணச்சாந்தினாலான விமானமுடையதாகச் சுதை விக்கிரகங்கள் ஏதுமின்றிய நிலையில் வடக்குநோக்கியதாகவே கருவறையும், அர்த்த மண்டபமும் மட்டுமே பூரணப்படுத்திய நிலையில் விளங்கின. அத்துடன் பாகசாலை, களஞ்சியள அறை, அந்தணர்சாலை என்பனவும் அமைக்கப்பட்டிருந்தன. கோபுரவாயிலுடன் உட்பிரகாரம் மதில் அமைப்புடன் அமைக்கப்பட்டிருந்தது.

ஆயிரத்துத்தொளாயிரத்து இருபதுகளிற் குருக்களின் விடாமுயற்சியால் அழகிய மகாமண்டபம், ஸ்நபன மண்டபம், தர்சன மண்டபம் ஆகியன பொலிவுபெற அமைக்கப்பட்டன. இக்கோயிலின் முதலாது புனராவர்த்தன கும்பாபிஷேகம், மகாமண்டபம் முதலான திருப்பணிகளைத் தொடர்ந்து ஆனி மாதம் பத்தொன்பதாம் திகதி சந்திரவாரம் மூலநாளில் இடம் பெற்றள்ளது. ஆங்கிலத் திகதி 1928 ஆம் ஆண்டு ஜீலை மாதம் இரண்டாம் திகதியாகும்.பரிபாலகர்களின் திருப்பணிகள்சீமெந்துக் கலவைகளால் தூண்கள். இரும்புப்பட்டங்களாலானதும் கன்னார்த் தகடுகளாலானதுமான கூரை வேலைகள் ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபதுகளில் ஆலயத்தின் முன்பக்கம் முதல் கழக்கு வாசல் வரை பூர்த்தி செய்யப்பட்டது. வசந்த மண்டபம் அமைக்கப்பட்ட இதே காலப்பகுதியிலேயே பரிவாரமூர்த்தியாக விளங்கும் ஆறுமுகசுவாமிக்கு தென்மேற்கு மூலையில் தனியான பரிவாரக் கோவில் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு ஸ்தூபிவேலைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் ஆயிரத்துத்தொளாயிரத்து என்பதிற் பரிவார ஷண்முகப் பெருமானுக்குரிய கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. இத்திருப்பணிகளை இவ்வாலய பரிபாலகர்களுள் ஒருவராகிய சிவஸ்ரீ கா.இரத்தினகைலாசநாதக் குருக்கள் அவர்களே தாமீட்டிய பொருள் கொண்டு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயிலின் பிந்திய திருப்பணி வரலாற்றில் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகள் குறிப்பிடத்தக்கவை. ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தொன்றில் இராமகிருஷ;ணன் ஸ்தபதியாற் கருக்கட்டப்பட்டு வாக்கப்பட்ட உற்சவ மூர்த்திகளாகிய சந்திரசேகர மூர்த்திகள் பிரம்மஸ்ரீ ஜகன்நாத சர்மாவால் மெருகூட்டப்பட்ட ஆலய பரிபாலகருள் ஒருவரான சிவஸ்ரீ கா.இரத்தின கைலாசநாதக் குருக்கள் அவர்களாலே பிரதிஷ;டை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆயிரத்துத் தொளாயிரத்து என்பத்து நான்காம் ஆண்டு பாலஸ்தாபனம் நடைபெற்றது. சிதிலமடைந்திருந்த பிள்ளையார், சிவன். அம்பாள் ஸ்தூபிபளின் சுண்ணாம்பினால் இருந்த மேற்பூச்சுக்கள் அகற்றப்பட்டுச் சீமெந்தினால் அழகுறப் புனரமைப்புச் செய்யப்பட்டதோடு கிழக்கு. தெற்கு மேற்கு ஆகிய திக்குகளில் ஏற்கனவே இருந்த சிவன் அம்பாளுக்குரிய கோஷ;டங்களும் புனரமைக்கப்பட்டன. சுப்பிரமணிய சுவாமிக்குரிய ஸ்தூபி அமைக்கப்பட்டதோடு விமானங்கள் அனைத்துக்குமுரியதான சுதை விக்கிரகங்களும் அமைக்கப்பட்டு ஆலயத்தின் பின்புறம் தெய்வீகக் காட்சியுடன் பொலிவுபெறலாயிற்று. நிருத்த மண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றம் லட்சுமி வடிவங்களைத்  தாங்கி ‘அஷ;டலட்சுமித் தம்பங்களாகத் எழுச்சி பெற்றன. தர்சன மண்டபத்தின் மேற்புறமாக நிருத்த மண்டபத்தினுள் உள்ளடங்கும் வகையில் வலமிருந்து இடமாக முறையே விநாயகர், மீனாட்சி கல்யாணம், ஸ்ரீமஹாவஷ;மி  துர்க்காபரமேஸ்வரி, பார்வதி கல்யாணம், ஸ்ரீசுப்பிரமணியர் ஆகிய சுதை வடிவங்களும் புதிதாக அமைக்கப்பட்டன. வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்களுக்குரிய விமானத்துடன் கூடிய புதிய ஆலயமும் அமைக்கப்பட்டது. தர்சன மண்டபத்திற் சுதை விக்கிரகங்களாக விளங்கும் துர்க்கை, வீரபத்திரர், ஆகியனவும் செப்பம் செய்யப்பட்டதோடு மண்டபங்கள் யாவும்; வர்ணங்கள் பூசப்பட்ட ஆலயம் புதுப் பொலிவு பெறலாயிற்ற. துவஜாரோகணத்துடன் கூடிய மகோற்சவத்திற்கு ஏதுவாக ஏற்கனவே தர்சன ஸ்நபன மண்டபங்களில் தனித்தனியே முறையே கைலாசநாத சுவாமிக்கும் கமலாம்பிகைக்குமாக ஸ்தாபிக்கப்பட்டிருந்த நந்தி. பலிபீடம் ஆகியன நிருத்த மண்டபத்தில் உரிய பீடத்திலும் அமைக்கப்பட்டதோடு கொடிமரமும் தனித்தனியாக அமைக்கப்பட்டன.

இத்தகைய திருப்பணிகளைத் தொடர்ந்து இரண்டாவது ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேக கிரியைகள் தொடங்கப்பட்டன. ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினைந்தில் அநாவர்த்தனப் பிரதிஷ;டையைத் தொடர்ந்து பதின்மூன்று ஆண்டுகளின் பின் ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தெட்டில் முதலாவது புனராவர்த்தன கும்பாபிஷேகம் நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து அறுபது ஆண்டுகளின் பின் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தெட்டில் இரண்டாவதாக ஜீர்Nhத்தாரண கும்பாபிஷேகம் 27.06.1988ல் விபவ ஆனி 13 திங்கட்கிழமை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் பூரண மகாமேரு ஸ்ரீ சக்கர இயந்திரத்தையும் பேராசிரியர் குருக்கள் பிரதிஷ;ட்டை செய்து வைத்தார்.கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோயிலைச் சேர்ந்த ஆனைக்கோட்டை சிலஸ்ரீ கைலாசநாதக் குருக்கள் சிவயாகத்தினையும் கார்த்திகேயக் குருக்களின் சீமந்த புதல்வரும்  இலங்கை பல்கலைக்கழக முன்னாள் சமஸ்கிருத சிரேஷ;ட விரிவுரையாளரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற முதல் இந்து நாகாரிகத்துறைப் பேராசிரியரும் இவ் ஆலயத்தின் தர்மகர்த்தாவுமுhகிய கலாநிதி சிவஸ்ரீ கா.கைலாசநாதக் குருக்கள் அம்பிகை யாகத்தினையும் பொறப்பேற்றனர். கார்த்திகேயக் குருக்களிடம் குருகுலவாசமாக இருந்து கல்வி கற்றவரான கோப்பாய் சித்தாந்தபானு சிவஸ்ரீ கி.சுப்பிரமணிய சாஸ்திரிகள் ஆகியோர் சர்வ போதகாசார்யார்களாகவும் சர்வசாதகா சாரியார்களாகவும் விளங்க, பேராசிரியர் கலாநிதி கைலாசநாதக் குருக்கள் அவர்களின் ஆசிரியர் வியாகரண சிரோமணி சிவஸ்ரீ பூரண. தியாகராஜா குருக்கள், சாகித்திய சிரோமணி பரம்மஸ்ரீ ந.லஷ;மி நாராயண சர்மா ஆகியோரின் உதவியுடன் இக்கும்பாபிஷேகத்தில் இலங்கையில் முன்னிலை வகிக்கும் சிவாசாரியார்களும், பேராசிரியர் கைலாசநாதக் குருக்களின் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வாறான இத்திருப்பணிகளை இவ்வாலய, பரிபாலகரான சிவஸ்ரீ கா.இரத்தின கைலாசநாதக் குருக்கள் அவர்களின் வழிகாட்டலில் அப்போது பரிபாலித்து வந்த பிரம்மஸ்ரீ ஸ்ரீ.கிருஷ;ணானந்த சர்மா அவர்கள் பிரம்மஸ்ரீ சு.வைத்திய நாதசர்மா அவர்களின் உதவியுடன் சிறப்புற நிறைவேற்றி வைத்தமை குறிப்பிடத்தக்கது. அடுத்து 2006ஆம் ஆண்டு இவ்வாலயத்தில் மிகப் பெரிய திருப்பணிகளான இரு இராஜகோபுரம், கொலு மண்டபம், மணிக்கூட்டு மண்டபம், பின்வாசல் வளைவு, உள்வீதிக் கொட்டகைகள் அமைக்கப்பட்ட நிலப்பகுதிகள் முழுவதும் சீமெந்து இடப்பட்டமை முதலிய திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு மூன்றாவது கும்பாபிஷேகம் இடம்பெற்றது. 23 யாகங்களுடன் கூடியதான 11 நாள் கிரியை நிகழ்வுகளோடு ஒன்பது நாட்கள் உத்தம யாகமாக இக்கும்பாபிஷேகம் நிகழ்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது. இக்கும்பாபிஷேக நிகழ்வுக்கு ஆலய தர்மகர்த்தாவாகிய சிவஸ்ரீ இரத்தின கைலாசநாதக் குருக்களும் தர்மசாஸ்தா குருகுல அதிர் சிவஸ்ரீமகாதேவக் குருக்களும் சர்வ போதகாச்சாரியாராக விளங்க பிரமகுருமார்களாக முன்னேஸ்வரம் சிவஸ்ரீ ஸ்ரீநிவாசக் குருக்களும், கோப்பாய் சாகித்திய சிரோண்மணி சிவஸ்ரீ முத்துக்குமாரசுவாமிக் குருக்களும் விளங்கினர். பல சிவாச்சாரியார்களின் உதவியுடனும் பரிபாலகர் பரம்மஸ்ரீ கிருஷ;ணானந்த சர்மாவின் நெறிப்படுத்தலில் சிவனடியார்களது பங்களிப்புடன் சிறப்பாக இக்கும்பாபிஷேகம் குறிப்பிடத்தக்கது.தருமசாதனம் செய்தவர்களுள் 1942ஆம் ஆண்டு தை அமாவாசைத் தினத்தன்று சுந்தரம்மாவும், அதே ஆண்டு ஆடி சதுர்த்தியன்று கார்த்திகேயக் குருக்களும், ஸ்ரீகமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாதப் பெருமானின் திருவடிகளில் மோட்சமடைய அவரது இரு குமாரர்களும் இணைத் தர்மகர்த்தாக்களாக உரிமை பெற்றனர். சிலகாலம் தாய்மாமனாகிய முனீஸ்வரம் சிவராமகிருஷ;ணன் ஜயர் சாம்சிவக் குருக்களின் அனுசரணையுடன் மாணவப் பருவத்தில் இருந்த இருவரும் ஆலய தர்மகர்த்தாக்களாகத் தம்மைப் பணியில் இணைத்துக் கொண்டனர் இவ்வாலயத் தர்மகர்த்தாக்களுளொருவராகிய மூத்த புதல்வர் சிவஸ்ரீ கைலாசநாதக் குருக்கள், கொழும்பில் இலங்கைப் பல்கலைக்கழகத்திற் சமஸ்கிருதமொழிக் கல்வியியல் தமது பண்பாட்டுடனேயே சிறந்துவிளங்கி பேராதனைப் பல்கலைக்கழகத்திற் கல்விப் பணியில் விரிவுரையாளராக இணைந்ததன் காரணமாக, இவ்வாலயத் தர்மகர்த்தர்களுள் மற்றவராகிய இளைய சகோதரர் சிவஸ்ரீ இரத்தின கைலாசநாதக் குருக்கள் அவர்கள் இவ்வாலய தர்மகர்த்தாவாகத் திகழ்ந்தார்.

தந்தையின் வழிநின்று கிரியை நெறி, சோதிடக் கலைகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் திகழ்ந்த இவரது காலத்தில் ஆலயம் பல வழிகளிலும் முன்னேற்றம் கொண்டது. கலாநிதி சிவஸ்ரீ கைலாசநாதக் குருக்கள் நீண்டகாலம் (1952-1975) பேராதனைப் பல்கலைக்கழகத்திற் கல்விப் பணியாற்றிய பின் இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகத்தில் 1975 ஆம் ஆண்டு முதன் முதலாக உருவாக்கப்பட்ட இந்துநாகரிகத் துறையின் முதற் பேராசிரியராகவும்;, துறைத்தலைவராகவும்; நியமனம் பெற்று, யாழ்ப்பாணம் வந்தபோது தமது சகோதரருடன் இணைந்து ஆலய பரிபாலனத்திலும், ஆலயத்தின் வளர்ச்சியிலும் தமது தந்தை முதலாகத் தொடர்ச்சியாக நிலவிவந்த கிரியைகளில் நியமமான ஒழுங்கினை ஏற்படுத்துவதிலும் பெரிதும் முன்னின்று உழைத்தார். நல்லூர் சிவன் கோவில் வளர்ச்சியில் இணைந்த தர்மகார்த்தாக்களான பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள், சிவஸ்ரீ இரத்தினகைலாசக்குருக்கள் ஆகியோர்களது பணி அளப்பரியது. 1983 ஆம் ஆண்டு முற்பகுதியில் இச்சிவன்  ஆலயத்தின் தாமபரிபாலகராகவும்; பிரதான குருவாகவும் விளங்கி வந்த வேளை முன்னேஸ்வரம் செல்ல வேண்டிய நிமித்தம் ஏற்பட்டுச் சென்ற போது சிவன் கோவில் தார்மபரிபாலனத்தின் பொறுப்பு பேராசிரியர் சிவஸ்ரீ கைலாசநாதக் குருக்கள் அவர்களைச் சார்ந்ததாக அமைந்தது.1979 ஆம் ஆண்டு முதல் ஆலயத்தோடு தொடர்புடைய தற்போதைய பரிபாலகர் பிரம்மஸ்ரீ கிருஷ;ணானந்த சர்மா, பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள், சிவஸ்ரீ இரத்தின கைலாசநாதக் குருக்கள், ஆகியோரின் வழிகாட்டலின்படி 1981 ஆம் ஆண்டு முதல் இவ் ஆலயத்தின் பரிபாலகராக விளங்கி வருவதுடன், 1988, 2006 ஆண்டுகளில் நடைபெற்ற இரு கும்பாபிஷேகங்கள் மற்றும் பாரிய திருப்பணிகள் என்பவற்றை நிகழ்த்தி ஆலய உட்கட்டுமானப் பணிகளை பூரண நிலைக்கு உரியதாக நிறைவேற்றியுள்ளதுடன் இன்று வரை அவர்கள் வகுத்த பாரம்பரியத்தின்படி 25 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வலாயத்தை சிறப்பாக நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.இவ்வாலயக் கிரியைகளை தகுந்த சிவாசாரியர்களான கோப்பாய் சிவஸ்ரீ வை.மு.பரமசாமிக்குருக்கள், அவர்கள் மகன் சாஹித்ய சிரோமணி சிவஸ்ரீ ப.முத்துக்குமாரசாமிக் குருக்கள் ஆகியோரின் உதவியுடன் சர்ம நேர்த்தியாக நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ சக்ர பூஜை மற்றும் நைமித்தியக் கிரியைகய் காலந்தவறாது ஒழுங்காக இவரது முயற்சியால் இவ்வாலயத்தில் நிறைவேற்றி வருகின்றன.

நல்லூர் சிவன் ஆலயமும் ஸ்ரீவித்யா பாரம்பரியமும்சிவன் கோவில் கும்பாபிஷேகம் ஆனது முதலாகப் பூபிரஸ்தாரம், கைலாசப்ரஸ்தாரம் ஆகிய இரு ஸ்ரீ சக்கரங்களையுதட கமலாம்பிகைக்கு முன்னதாக வைத்து ஆராதித்து வந்தார்கள். செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களிற் தாம் அனுசரித்து வந்த பூஜாக்ரமப்படியும், பௌர்ணமி தினங்களிற் பரசுராம கல்ப சூத்திரத்திலுள்ள சபர்யாக்கிரமப்படியும் மாலையில் சாயரட்சைப் பூஜையின் பின்னர் தொடர்ந்து நடாத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது அம்பிகைக்கு முன்பாக அமைந்துள்ள பூரண மகாமேரு இயந்திரத்திற்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.1988 ஆம் ஆண்டு முதலாக சாரதா நவராத்திரி காலங்களில் நல்லூர் சிவன் கோயிலில் பேராசிரியர் குருக்கள் தாமே பிரதம சிவாசாரியராக இருந்து தசசண்டீஹோமம், அபிஷேகம், ஸ்ரீசக்கர பூஜை ஆகியனவற்றை ஆரம்பித்து நடாத்தி வந்தமை இவ்வாலயக் கிரியை வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.நல்லூர் கைலாசநாதர் கோயில் கார்த்திகேயக் குருக்கள் அவர்ளது முயற்சியால் ஆக்கப்பட்டதன் காரணமாக கோயில் பரிபாலனத்திற்கெனப் பெரும் சொத்துக்களை அமைக்கமுடியவில்லை. கார்த்திகேயக் குருக்கள் அவர்கள் தமக்கு உரிமையாயிருந்த நிலம் இருபத்தைந்து பரப்பினைத் தமது பத்தினியாருடன் இணைந்து தரும சாதனமாக வழங்கினார். அநேக தென்னை மரங்கள், பயன்தரு கனிமரங்கள், சிறந்த நந்தவனம் ஆகியவற்றோடு விளங்கிய கோயிலின் தென்புறக்காணி 1970 களிற் புதிதாகத் திறக்கப்பட்ட வீதிக்கென இலங்கை அரசினாற் சுவீகரிக்கப்பட்டதனால் எஞ்சிய பகுதி வீதியாற் பிரிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தில் நிகழ்ந்து வருகின்ற சைவத் திருமணங்களாற் பெறப்படும் வருமானம், சோதிட நிலையத்திலிருந்து வரும் வருமானம், ஆலய நித்திய நைமித்தியங்களாற் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றைக் கொண்டே இவ்வாலயம் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

ஆலயத்தின் அமைப்புநல்லூர் கைலாசநாதர் கோயில் அமைப்பு முறையைக் கருத்திற் கொள்ளுமிடத்திற் கிழக்கு மேற்காக உள்ள பழைய பருத்தித்துறை வீதியை முன்புறமாகக் கொண்டதும், கல்வளவின் நடுவிற் கிழக்கிலிருந்து மேற்காகவும், வடக்கு நோக்கிய வாசல்களையுடையதாகவும் ஆலயத்தின் கருவறை, அர்த்த மண்டபம், ஆகியனவற்றையும் உள்ளடக்கியதுமான இவ்வாலய மையப் பகுதி விளங்குகின்றது. கிழக்கிலிருந்து மேற்காக விநாயகர், ஸ்ரீ கமலாம்பிகை. சிவகாமி சமேத நடராஜர், ஸ்ரீகைலாசநாதர் சுவாமி, வள்ளிதேவசேனா சகித சுப்பிரமணியர் ஆலயங்கள் ஒழுங்காக வடக்கு நோக்கியதாகக் காட்சி தருகின்றன. கைலாசநாத சுவாமியின் கருவறையின் விமானம் வட்டமாகவும், மூலலிங்கத்தின் ஆவுடையார் வட்டவடிவமாகவும் விளங்குகின்றது. ஸ்ரீகமலாம்பிகையின் கருவறையின் விமானம் சதுரவடிவமாக இரண்டு கைகளையுடைய அம்பிகையை மையமாகவும் கொண்டு விளங்குகின்றது. இரு கருவறைகளுக்கும் தனித்தனியாக அர்த்த மண்டபமும் உண்டு. கிழக்கு நோக்கிய கருங்கல் வேலைப்பாடுகள் நிறைந்த கோமுகைகள் மூலாலயத்தை நன்கு அலங்கரிக்கின்றன. ஸ்ரீ கமலாம்பிகை, ஸ்ரீ கைலாசநாத சுவாமி ஆகிய இரு மூலஸ்தானங்களினதும் நடுப்புறம் நடரரிர் சன்னிதியும், அம்பாள் மூலாலய அர்த்த மண்டபத்தின் இடப்புறமாகச் சுப்பிரமணியரின் கருவறையும் விளங்குகின்றன. சிவன் அம்பாள் கருவறையின் அர்த்த மண்டபத்தையடுத்து ஜந்து சந்நிதிகளையும் இணைக்கின்றதாக ஸ்நபன மண்டபத்தின் ஒரு பகுதியாக மஹா மண்டபம் விளங்குகின்றது.

ஸ்நபன மண்டபம் வடக்கு நோக்கியதாக மூன்று வாசல்களையும், விநாயகர் சுப்பிரமணியர் ஆகிய மூர்த்திகளினைத் தரிசிப்பதற்குரிய பிலத்துவாரங்களையும் கொண்டதோடு கிழக்கு நோக்கிய ஒரு வாசலையும் கொண்டு விளங்குகின்றது. ஸ்நபன மண்டபத்தின் மேற்குப்புறம் கிழக்கு நோக்கியதாகப் பரிவார உற்சவ மூர்த்திகள் விளங்குகின்றன.தர்சன மண்டபம், கிழக்கு மேற்குத் திக்குகளிற் சுவர்களுடையதாக விளங்குகின்றது. மேற்குப்புறச் சுவருக்கு அருகிலுள்ள கிழக்கு நோக்கியுள்ள மூன்று மாடங்களில் தெற்கிலிருந்து வடக்காக விஷ;ணு ரூபமான சந்தான கோபாலர், வீரபத்ரர் ஷேத்ரபாலர் ஆகிய மூர்த்திகளும் அதே போற் கிழக்குச் சுவருக்கு அண்மையாக உள்ள மேற்கு நோக்கிய மூன்று மாடங்களில் தெற்கிலிருந்து வடக்காகச் சண்டேஸ்வரர். ஸ்ரீ மஹஷரமர்த்தினி, விநாயகர் அகிய மூர்த்திகளும் விளங்குகின்றன. மூல ஆலயப்பகுதிக்கு ஈசான திக்கில் முதலாம் பிரகாரத்தில் இரு திருமஞ்சனக்கிணறுகளும், நவக்கிரக கோவிலும் விளங்குகின்றது. அம்பாளின் கோஷ;டங்களில் முறையே துர்க்கை, தகூஷpணாமூர்த்தி, இலிங்கோற்பவர் ஆகிய மூர்த்திகளம் அபிரதிஷ;டை செய்யப்பட்டுள்ளன. தென்மேற்குத் திக்கில் வடக்கு நோக்கியதாக நின்ற கொலு மண்டபமும், வட கிழக்கில் பாகசாலை களஞ்சியம், திருமண நிகழ்விற்குரிய சாப்பாட்டு மண்டபம், வாகன சாலை, கோசாலை என்பனவும் அமைந்தள்ளது.

மேற்குப்பக்கத்தில் குருவாசம், கைலாஸநாதக் குருக்கள் அய்வு மையம், நூல் நிலையம், அலுவலகம் என்பனவும் அமைந்துள்ளது. ஆலய வாசலானது சிவனுக்கும் அம்பிகைக்கும் தனித்தனியாகப் பஞ்சதள இராஜகோபுரங்களும் அமைந்து மணிக்கூட்டு கோபுரமும் அமைந்ததாகவும் உள்ளது. ஆலய வாயிலுக்கு கிழக்குப் பக்க வாசலிலிருந்து மேற்கு வசந்த மண்டபம் வரையான நிலப்பகுதிகளும் சீமெந்து இடப்பட்டு மேற்கூரைகளும் அமைக்கப்பட்டு ஆலய உட் கட்டுமான வேலைகள் பெரிதளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சமய குரவர்கள் நால்வருடைய விக்கிரகங்களும் பிரதிஷ;டை செய்யப்பட்டு தற்போது காலசம்ஹர மூர்;த்தியின் சுதை விக்கிரமும் பின் வீதியில் தெற்கு நோக்கிப் பிரதிஷ;டை செய்யப்பட்டுள்ளது. உறுதியும் கனதியும் கொண்ட பித்தளைத் தனட்டு உருளைகளின் உட்புறத்தே செறிந்த வலிய கருங்கற்கலவையாகிய கொங்கிறீற் கலவையால் இறுக்கி உருவாக்கப்படடள்ளன. எப்பொழுதும் பளபளக்கும் தன்மை வாய்ந்த எட்டுத் தூண்களுடன், ஸ்நபன மண்டபமும் அதே போலத் தர்சன மண்டபத்தினுடைய பண்டிகையைப் பன்னிரு தூண்களும் தாங்கி நிற்கின்றன. செப்புத்தூண் சிவன்கோவில் எனச்சிறப்பாக அழைக்கப்படும் இக்கோவிலின் ஆரம்ப காலத்தில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் பெருவீதிப் பிரகாரம் என முப்பெரும் பிரகாரங்கள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கோவிலைச்சற்றியுள்ள பிரகாரத்தையடுத்து கிழக்குப் புறமாக இன்று சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலப்பரப்பும், தெற்குப்புறமாக அமைந்திருந்த முன்னைய பூங்காவும், மேற்குப் பறமாக அமைந்துள்ள நந்தவனம் காரியாலயம் என்பன அமைந்துள்ள பகுதியே வெளிப்பறமாகும்.

வடக்குப் பமாக அமைந்துள்ள கோயில் வீதி, தென்திசையில் அமைந்துள்ள வைமன் வீதி எனும் நாற்பெரும் வீதிகளே அன்றைய பெருவீதிப் பிரகாரமாக அமைந்து விளங்கீற்று. இன்று இறைவனுடைய திருவுலா இரு வீதிகளில் மட்டும் வலம் வருகிறது. ஒன்று உட்பிரகாரம், மற்றையது ஆலயத்திற்கு பின்புறம் அமைந்துள்ள புதிய பருத்தித்துறை வீதி ஆகியவற்றுடன் கூடிய வெளிப்பிரகாரமாகும்.நல்லூர் சிவன் கோயில் அநாவர்த்தன நிர்மாண வேலைகளைப் பொறுப்பேற்று காரணாகமதத்தில் அதிவிஷேட புலமையும் பயிற்சியும் கொண்ட ஸ்தாபகர் சிவஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள் அவர்களின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் காரணகமம் கூறும் விதிப்படி நிர்மாணித்த கைங்கரியத்தில் ஈடுபட்டவர்களுள் தலைமை வகித்தவர் இத்துறையிற்  சிறந்த அனுபவம் பெற்ற இவ்வாலய சரவணை ஸ்தபதி அவர்களாவார். எண்பதுகளில் இடம்பெற்ற இவ்வாலய புனருத்தாரணம் செய்யப் பொறுப்பாக இருந்தவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த வேதகோட்டை நாகலிங்கம் ஸ்ததியும் அவர்களது மைந்தர்களும் ஏனைய சிற்பக் கலைஞரரும் ஆவார். 2006 இடம் பெற்ற இராஜகோபுரம், மணிக்கோபுரம், கொலு மண்டபம், பின் வாசல்வளைவு முதலான புனருத்தாராண வேலைகளுக்குப் பொநுப்பாக விளங்கியவர் இந்தியா கும்பகோணத்தைச் சேர்ந்த புருஷேhத்தமன் ஜ்தபதி குழுவினராவர். நல்லூர் கைலாசநாதர் கோவிலில், கோவில் அமைப்பு,மூர்த்திகள் பிரதிஷ;டை செய்யப்பட்டுள்ள தன்மை, வழிபாட்டு முறை ஆகியவற்றைப் பொறுத்தவரை தனித்துவமும் சிறப்பும் காணப்படுகின்றது. கோவில் வடதிசை நோக்கியதாக அமைக்கப்பட்டதற்கேற்ப ஏனைய அம்சங்கும் இடம்பெற்றுள்ளன. வடக்கு நோக்கி அமைய வேண்டிய கோமுகைகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. திருக்கோயிலின் இடது புறத்தில் வடகீழ்த்திசையில் அமைய வேண்டிய நவக்கிரக மூர்த்திகளின் கோயில் கோயிலுக்கு வலது புறத்தில் வடக்கே உள்ளது. வசந்த மண்டபமும் கோயில் அமைப்புக்கேற்ப கிழக்கே நோக்குவதாயிற்று . பரிவாரக் கோயிலாகிய ஆறுமுக சுவாமியின் கோயில் அமைவுக் கேற்ற வகையில் இடம் பெற்றுள்ளது.

பஞ்சமூர்த்திகள் ஒருங்கே விளங்கும் இவ்வாலயத்தில் தேவி சந்நிதி வடக்கு நோக்கியதாக சிவனக்கு வலது புறமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மதுரையில் மீனாட்சியம்மையின் சந்நிதி சுந்தரேசுவரப் பெருமானுக்கு வலப்பக்கமாக அமைந்து விளங்கும் ஐதீகம் இங்கும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.நல்லூர் சிவன் ஆலயத்தின் கலையம்சங்கள் இவ்வாலயத்தின் கலையம்சங்களும் குறிப்பிடற்பாலன கோயிலின் பிரதான வாயிலுக்கு அடுத்தபடியாக அடியார்களின் கண்ணுக்கும் கருத்தக்கும் விருந்தளிப்பவை அஷ;டலட்சுமிகளின் வண்ணமிகு திருவுருவங்களாகும். மகா மண்டப வாயிலில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும் குறிப்பிடத்தக்கவை. விதானத்தில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் அழகு மிக்கவை. மண்டபத்தின் நடுநாயகமாக ஸ்ரீ மஹாலட்சுமியின் துர்க்கா பரமேஸ்வரி சிம்ம வாகனத்திற் காட்சி தருகிறாள். தேவியின் வலப்புறமாக ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவமும், வலப்புறம் பார்வதி திருக்கல்யாண வைபவமும்,  சிற்பங்களில் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. வலது கரையில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியப் பெருமானின் திருவுருவமும் இடம்பெற்றுள்ளன. இந்துப் பண்பாட்டின் கலைமரக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இச்சிற்பங்களை ஆனைக்கோட்டை நாகலிங்கம் ஸ்தபதியும், ஓவியங்களை ஆனைக்கோட்டை ஓவியர் சுந்தரலிங்கமும் உருவாக்கியுள்ளனர். 1988,2006 முதலிய காலங்களில் நிகழ்ந்த கும்பாபிஷேகப் பணிகளிலும் ஓவியர் சுந்தரலிங்கமே வர்ணவேலைகளைச் செய்துள்ளார்.சிறந்த கலையம்சங்களுடன் பொலிந்து விளங்கும் மணி ரதமும் இவ்வாலயத்தில்  உள்ளது. இம்மணிரதத்தை பிரம்மஸ்ரீ வைத்தியநாத ஐயரின் ஆலோசனைக்கு எற்ப உருவாக்கியவர் நீர்வேலி சீனிவாசகம் ஆச்சாரியராவார். இவ்வாலயத்தில் இடம் பெறும் உற்சவங்களுக்கேற்ப வாகனங்களும் சிற்ப அமைதிகளுடன் வனப்புடன் காட்சி தருவன. பிரதோஷத் திருவிழாவிற்குரிய இடப வாகனம், யமதூதனின் உருவம் ஆகியவை சிற்பியின் கைவண்ணத்தைப் புலப்படுத்தி நிற்பன.

தென்னிந்தியாவைச் சேர்ந்த சிற்பக்கலைஞராகிய இராமையா அவர்களது கை வண்ணத்தில் இவை உருவாக்கப்பபட்டவை. இதேபோல குதிரை வாகனம் , பெரிய இடபவாகனம் ஆகியவை வட்டுக்கோட்டை வைரவநாதன் எனும் சிற்பக் கலைஞரது கைவண்ணத்திலும், பத்மம், காமதேனு, சிறிய இடப வாகனம், சர்ப்பம் ஆகியவை திருநெல்வேலி இராசரத்தினம் எனும் சிற்பக்’ கலைஞரது கைவண்ணத்திலும் உருவாக்கப்பட்டது.இவ்வாலய வழிபாட்டின் போதும் கிரியைகளின் போதும் பூஜைக்குரிய கலைவனப்புடன் விளங்கும் பூஜா பாத்திரங்கள், அபிஷேகப் பாத்திரங்கள் ஆகியன பல செப்பு, பித்தளை ஆகிய உலோகங்களால் உருவாக்கப்பட்டவை. ஸ்ரீசக்கர பூஜைக்கு எனச் சிறப்பாக ஒன்று திரட்டப்பட்டு விளங்கும் தங்கத்தினாலானதுமான பாத்திரங்களின் கலைவனப்புக்கள் தனித்துவமானவை. கைலாசநாதருக்குச் சாத்தப்படும் வெள்ளியிலான பஞ்சமுக நாகாபரணம் கலையெழில் மிக்கது. அதேபோன்று ஸ்ரீ கமலாம்பிகைக்குச் சாத்தப்படும் திருஇங்கி, திருமுடி, திருக்காதுகள், திருக்கைகள் என்பனவும். அபிஷேகத்திற்குரிய பாத்திரங்கள் ஆகியன ஆலயம் சார்ந்த பண்பாட்டினைப் பிரதிபலிப்பனவாக உருவாக்கப்பட்டவை.இவ்வாலய வழிபாட்டின் போதும் கிரியைகளின் போது மூர்த்திகளுக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் சிவாகமங்கள் கூறுகின்ற மூர்த்தி அலங்கார விதிகளுக்குஅமையவே அலங்கரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ கைலாசநாத சுவாமிக்குச் சாத்தப்படும் தங்கத்தினாலான இருபத்தைந்து சிவனது மூர்த்தி பேதங்களும் ஒருங்கே விளங்கும் கௌரி சங்கம், ருத்ராட்ச மாலை என்பனவும், ஸ்ரீ கமலாம்பிகைக்கு அளிக்கப்படும் சதுஷ;ஷஷ;டி உபசாரங்களில் இடம்பெறுகின்றதான தங்கத்தினாலான நவரத்தின மகுடம் முதலான ஆபரணங்களும் கலையெழிலுடன் உருவாக்கப்பட்டவை. கமலாம்பிகைக்குச் சாத்தப்படும் சிங்கமுகக் காப்பு மகர கெண்டிப் பதக்கம்,காசுமுhலை என்பன கலைவண்ணத்தின் உயர் சின்னமாக விளங்குகின்றது.

நல்லூர் சிவன் ஆலயமும் ஜோதிஷமும்ஜோதிஷத் துறையில் தனித்துவமான முத்திரை பதித்த இவ்வாலய ஸ்தாபகர் கார்த்திகேயக் குருக்கள் அவர்கள் சேர்.பொன்.இராமநாதன் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வழிகாட்டி கிரகநிலைகளை உத்தேசித்து சாந்திகள் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது. ஜோதிடம் சொல்லுவதனையும் ஆலயப் பணியுடன் இணைந்து இந்துக்களுக்குக் கிரகநிலைகளால் ஏற்படக் கூடிய தோஷங்களைச் சாந்திகள் மூலமாக நிவர்த்தி செய்து சிறந்துவிளங்கிய கார்த்திகேயக் குருக்கள் அவர்களின் மரபினை வெரது குமாரர்கள் பின்தொடர்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. தர்மகர்த்தாக்களுள் ஒருவரும் முன்னேஸ்வரம் ஆலய பரிபாலகருமான சிவஸ்ரீ இரத்தினகைலாசநாதக் குருக்கள் அவர்கள் இவ்வாலயத்திற் சாதிமத வர்க்க பேதமின்றி, சாந்தி பூஜைகள், திருமண வைபவங்கள் என்பனவற்றைத்தாமே நடாத்திவைத்து வந்தமையும், அம்மரபைத தொடர்ந்து பேணப்படுவதற்கு அடித்தளம் அமைத்தமையுமான தன்மையில் இவ்வாலயத்தில் இவ்வாறான பணிகள் இன்றும் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நல்லூர் சிவன் ஆலயமும் குருகுல மரபுகளும்நல்லூர் சிவன் கோயில் ஆலய வழிபாட்டிற்குரியதாக விளங்கியதோடு, சிவஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள் அவர்களின் முயற்சியால் வைக்கம் பிரம்மஸ்ரீ சு.சிதம்பர சாஸ்திரிகள், சுன்னாகத்தை உறைவடமாகக் கொண்ட பிரம்மஸ்ரீ P.ஏ.சிதம்பர சாஸ்திரிகள், கோப்பாயில் சிலகாலம் வசித்துவந்த பிரம்மஸ்ரீ ஸ்ரீனிவாஸ சாஸ்திரிகள்; ஆகியோர்களைச் சிவன்கோயிலுக்கு வரவழைத்து அந்தணச் சிறுவர்களுக்குரிய வேதாத்யாபனம் நடைபெறுவதறங்கு மத்திய நிலையமாக விளங்க வைத்ததோடு சிவாகமங்களுள், சிறப்பாபக் காரணாகமத்தில் nதிக பயிற்சியும் பாடாந்தரமும் கொண்ட இவ்வாலய ஸ்தாபகர் கார்த்திகேயக் குருக்கள் தாமே மூலாகமங்களையும், பத்ததிகள் கூறும் கிரியை நுட்பங்களையும் கசடறக் கற்பிப்பவராகவும் விளங்கினார். இம்மரபினைப் தர்மகர்த்தர்களான பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள், இரத்தினகைலாசநாதக் குருக்கள் ஆகிய இருவரும் பின்பற்றி வந்தனர். இவர்களது பணிக்கு முன்னேஸ்வரம்சிவஸ்ரீ சி.சாம்பசிவக்குருக்கள் உறுதுணையாக விளங்கினார்கள். இவ்வாலயத்தர்மகர்த்தாக்களின் முயற்சியினாலேயே தாம் வைதிக, ஆகம மந்திரங்களைக் கற்பித்து வந்த நிலையிலிருந்து சிறப்பாக யாழ்ப்பாண சமூகம் வைதிகக் கிரியைகளில் முழுப்பயன் பெறும்பொருட்டு அறபதுகளில் தென்னிந்தியா கல்லிடைக்குறிச்சி பிரம்மஸ்ரீ சிதம்பர சாஸ்திரிகளையும், எண்பதுகளில் தென்னிந்தியா நாகபட்டினம் பிரம்மஸ்ரீ சிவராம கிருஷ;ண சாஸ்திரிகளையும் வரவழைத்து உதவி வந்தமை குறிப்பிடத்தக்கது. தந்தையின் மரபுவழி பேணியவரான இவ்வாலய பரிபாலகருள் ஒருவரான பேராசிரியர் கைலாசநாதக்குருக்கள்  திருநெல்வேலியில் 1980களில் ஸ்ரீவித்யா குருகுலத்தை நிறுவி சிவாசார்ய பாரம்பரியத்தையும், வைதிக மரபையும் வளம்பெறச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாலய ஸ்தாபகர் சிவஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள் அவர்களின் கனவை நனவாக்கும் நிலையிலேயே இவ்வாலயத்தின் பின்  புறத்திலிருக்கும் காணியில் ‘ஸ்ரீகமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி வேதாகம பாடசாலை’ ஒன்றினை அமைக்க வேண்டும் எனும் திட்டத்தினை இவ்வாலயப் பரிபாலகருள் ஒருவரான பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் முன்வந்தமை குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் உருவாக்கி நடாத்திய குருகுலத்திற் பயிற்சி பெற்ற மாணவ பரம்பரை இவ்வாலய வழிபாட்டின்போதும், கிரியைகளின்போதும், வேதபாராயணம், மந்திர உச்சாடனம் ஆகியவற்றில் இவ்வாலயத்தில் இன்றும் பங்னுகொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அம்மாணவ பரம்பரையினரில் ஒருவரான கிருஷ;னானந்த சர்மா இன்றளவும் இவ்வாலயத்தில் காலை மாலை வேளைகளில் அந்தணச் சிறார்டகளுக்கு வேத சிவாகம வகுப்புக்களை நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

நல்லூர் சிவன் ஆலயமும், நல்லை ஆதினமும் கோயிலை அண்மித்ததாக அமைந்துள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தின் ஸ்தாபகர், முதலாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீவஸ்ரீசுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் துறவு மேற்கொள்ளும் முன்பே இக்கோயிலுடன் நெருங்கிய தொடர்பு பூண்டு பண்ணிசை, கதாப்பிரசங்கம் போன்றவற்றை நிகழ்த்தி, மக்களிடையே சமய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். ஆதீனம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னரும். அத்தொடர்பு நீடித்தது. கோயிலின் திருப்பள்ளியெழுச்சி,திருவெம்பாவை, திருவாதிரை நாளில் நிகழும் திருவூடல் ஆகிய நிகழ்வுகளுடனும் ஆதீனம் தொடர்புபட்டு வருகின்றது. திருஞான சம்பந்தர் குருபூசையை இறுதியாகக் கொண்ட பத்துத்தினங்கள் நடைபெறும் ஞானப்பால் உற்சவம் முதலான அற்புத உற்சவங்கள் புராணபடனங்கள், சமய குரவர்களின் குருபூசை தினங்கள் ஆகியனவும் ஆதீனத்தின் தொடர்பிற் குறிப்பிடத்தக்கன. பரமாச்சாரிய சுவாமிகள் இந்தியா சென்று, அங்கிருந்து ஊடற்பதிகம் கொண்டு வந்து இக்கோயிலில் முதல் முதலாக மார்கழித் திருவாதிரை தினத்தில் திருவூடற் திருவிழாவின்போது பயன்படுத்தி ஆரம்பித்து வைத்தார். இரண்டாவது மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும் இவ்வாலயத்தில் முதலாவது சந்நிதானம் தொடக்கி வைத்த இப்பணிகளை நிறைவேற்றி வருகிறார்.நல்லூர் சிவன் ஆலயமும், சமூக சேவைகளும் சைவத் திருமணங்கள் உரியவாறு நிகழ்த்தப்படும் நிலையில் இவ்வாலயப் பரிபாலனம் ஏற்ற ஒழுங்குகளைச் செய்து வருவது ஒரு சிறந்த சமூகப் பணியாகக் கருதப்படத்தக்கது. இவ்வாலயத்தில் நடைபெறும் திரமணங்களை உரியவாறு பதிவேட்டில் நிறுவன ரீதியாக அமையும் தன்மையிலும் தேசவழமைச் சட்டத்தின்படி கிரியை ஒழுங்கின்படி நிகழ்ந்த விவாகத்தைப் பதிந்து விவாகச் சான்றுதழ்களைத் தேவைப்படுவொருக்கு வழங்கி உதவி வருவது சிறப்பம்சமாகும். வளம்பொருந்திய சிவாசாரிய மரபைப் பேணிவரும் இவ்வாலயம் தனது பாரம்பரியத்திற் சிறப்பாக அந்தண சமூக முன்னேற்றங்களுக்காகத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவ்லாலயத்தைப் பரிபாலித்து வரும் தருமகர்த்தாக்கள் அந்தண சமூகத்தவர்களுக்கு இவ்வாலயத்தில் விவாஹம், உபநயனம், ஷஷ;டியப்த பூர்த்தி முதலான சாந்திகள், ஆசார்ய அபிஷேகம் முதலிய வைபவங்கள் நடாத்துவதற்கு முழுமையாகத் தம்மை அர்ப்பணித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு 13.11.1949இல் ஆரம்பிக்கப்பட்டு பதினான்கு ஆண்டுகள் சிவாசாரிய சமூக மேம்பாட்டிற்பாகப் பணியாற்றி வந்த ‘ அகில இலங்கைச் சைவ குருமார் சபையும்’இ முகாந்தரம் சதாசிவ ஐயரால் 1940 களில் ஆரம்பிக்கப்பட்டது. அவரின் மறைவின் பின்னர் 31.03.1962 இல் புத்துயிர் பெற்று சமூகத்திற்குப் பணியாற்றி வந்த ‘பிராமண சமூக சேவா சங்கம்’ என இணைந்து, சனிக்கிழமை 1965 ஆம் ஆண்டு யூன் மாதம் இக்கோயிலின் வசந்த மண்டபத்தில் நடைபெற்ற மஹசபைக் கூட்டத்தில் இவ்வாலயப் பரிபாலகருள் ஒருவரான கலாநிதி சிவஸ்ரீ கா.கைலாசநாதக் குருக்கள் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்படட்தோடு இச்சங்கம் மூன்று அமர்வுகளாக 19.06.1965, 20.606.1965 ஆகிய தினங்களில் இவ்வாலய வசந்த மண்டபத்திலேய வித்துவான் கணேசையர் அரங்கு என காரைநகர் சிவஸ்ரீ ச.கணபதீஸ்வரக்குருக்கள் அரங்கு என மாவிட்டபுரம் சவஸ்ரீ சு.துரைச்சாமிக் குருக்கள் தலைமையிலும் முகாந்திரம் தி.சதாசிவ ஐயர் அரங்கு என கலாநிதி சிவஸ்ரீகா.கைலாசநாதக் குருக்கள் தலைமையிலும் விஷேட மாநாடு ஒன்றினை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை தோறும் அன்னதானம் வழங்கி வந்த இவ்வாலயத்தை மையமாகக் கொண்ட சமூகசேவைகளுள் அறுபதுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தேழாம் ஆண்டு ஆயிரத்துத்  தொளாயிரத்து தொண்ணூறு  ஆயிரத்துத்  தொளாயிரத்து தொண்ணூற்றைந்து, தொண்ணூற்றாறு, ஆகிய ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட போர்ச்சூழ்நிலைகள் ஆகியனவற்றிற்கு மக்கள் தஞ்சமடைந்து வாழ்ந்த இடமாகிய இவ்வாலயத்தில் அவ்வக்காலத்தில் இம்மக்களுக்கு உணவு, உடை, என்பவற்றை வழங்கி ஆதவளித்து மட்டுமல்லாமல் தற்காலிகமான உறைவிடத்தானத்தையும் இவ்வாலயம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவ்வப்போது இந்திய அறிஞர்களான கி.வா.ஜகனநாதன், சேக்கிழார் அடிப்பொடி ரி.என். இராமச்சந்திரன், சிதம்பரம் நடராஜ தீஷpதர் ஆகியோர் வருகை தந்து சொற்பொழிவுகள் ஆற்றி சிறப்பித்தமையும், இந்திய நாதஸ்வரத் தவிற் கலைஞர்கள், சங்கீத நடன விற்பன்னர்கள் ஆகியோரும் வருகை தந்து நிகழ்வுகளை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கத. ஆலயத்தின் ஆரம்ப காலம் முதல் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக ஆலயத்தின் நிரைப் பெற்று வருவது வழக்கம். இன்றுவரை இப்பணி தொடர்வதும், ஒவ்வொரு நாளிலும் சுமார் 1000-1500 லீற்றர் வரையான நீர் வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அடியார்களை உளவள நிலையில் ஆற்றுப்படுத்தும் முகமாக சோதிடம், சாந்தி பரிகாரம் என்பவற்றுடன் பார்வை பார்த்து நூல் கட்டுதல் முதலியனவும் நடைபெற்று வருகின்றன.காலந்தோறும் இவ்வாலய பரிபாலகர்களால் சமூக மேம்பாடிற்குத் தம்மால் இயன்ற வழங்களை வழங்கி வருது குறிப்பிடத்தக்கது. இவ்வகையில் ஆலய ஸ்தாபகர்களின் முன்னோரால் நல்லூரில் அமைக்கப்பட்ட பாடசாலை குறிப்பிடத்தக்கது. இது பற்றி நல்லூhர் மங்கையற்கரசி வித்தியாசாலை மலரில் (13பக்) திருமதி சத்தியபாமா குமாரசாமி அவர்கள் ‘பிரம்மஸ்ரீ கார்த்திகேயக் குருக்களின் (தம்பையா குருக்கள்) முந்தையோர் அக்காலக் சூழ்நிலைக்கேற்ப கொட்டகைகள் அமைத்துச் சிறிய பாடசாலையை அமைத்தனர்.

பிராமணப் பள்ளிக் கூடம் என இது அழைக்கப்பட்டது. சிறிய அளவில் இயங்கிய இப்பாடசாலைக்குப் பின் மங்கையற்கரசி வித்யாசாலை எனப் பெயரிட்டனர்’  எனக் குறிப்பிடுகிறார். அவ்வப்போது சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் பரிபாலகர்கள்  அகதிகள் புனர்வாழ்வுக் கழகம், சைவை வித்தியா  அபிவிருத்திச் சங்கம், சர்வோதயம், இந்து அமைப்புக்கள் ஒன்றியம், இந்து குருமார் ஒன்றியம் போன்ற நிறுவனங்களினூடு மக்களுக்கும், அந்தணர்களுக்கும், இடர்பாடுகள் ஏற்பட்ட வேளையில் தம்மாலான உதவிகளை வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.இவ்வாலயத்தை அடித்தளமாகக் கொண்டு இந்தணர் சமூகத்தவர்களின் அறிவு, சமூக மேம்பாடு என்பவற்றைக் கருத்திற் கொண்டு இவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் 1997இல் நியந்ரீ என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. பேராசிரியர் கைலாசநாதக் குருக்களைப் போஷகராகவும்;, பேராசிரியர் ப.கோபாலகிருஷ;ண ஜயரைத் தலைவராகவும்;, யாழ் மாவட்ட மேலதிகப் பதிவாளரான  ந.சதாசிவஜயரைச் செயலாளராகவும் கொண்டு ஏனைய 21 செயற்குழு உறுப்பினர்களைக் கொண்டதாகவுமு; விளங்குகின்ற இவ் அமைப்பு நூல் வெளியீடுகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், அந்தணர்களுக்கு உரிய உபாகர்மம் முதலிய பணிகளோடு உபவீதம் செய்யப்பட்ட உபநீதர்கள், ஆசார்யாபிஷேகம் செய்யப்பட்ட ஆசார்யர்கள், 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை கா.பொ.தா சாதாரண உயர்தரப் பரிட்சை இவைகளில் சித்தியடைந்த அந்தணச்சிறார்கள், பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்கள், உத்தியோக நிலையில் பதவி உயர்வு பெறுபவர்கள் ஆகியோரை பாராட்nயும் கௌரவித்தும் ஊக்குவித்தமையும் குறிப்பிடத்தக்கது. இச்சபை வலிகாமம் இடப்பெயர்வு, தென்மராட்சி இடப்பெயர்வு போன்ற வேளையில் அந்தணர்களுக்கு வழங்கிய ஆற்றுப்படுத்தல்கள், உதவிகள் என்பனவும் குறிப்பிடத்தக்கன.பேராசிரியர் குருக்கள் அவர்களின் மறைவிற்குப் பின் அவர்தம் சிந்தனைகளைச் செயல் வடிவம் ஆக்குவதன் பொருட்டு அவரது அன்புக்குரிய மாணவர்களாலே ஆலயத்தை மையமாகக் கொண்டு 11.03.2001 இல் பேராசிரியர் கா.கைலாஸநாதக் குருக்கள் ஞாபகார்த்தசபை, ஆய்வு நிறுவனம் நூல் நிலையம் என்பன ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச்சபையின் தலைவராகவும் வாழ்நாட் பேராசிரியர் கலாநிதி கோபாலகிருஷ;ணஐயரே விளங்குகிறார். செயலாளராக ச.பத்மநாதசர்மாவும் பொருளாளராக யாழ் பல்கலைக்கழக சமஸ்கிருதத்துறை சிரேஷ;ட விரிவுரையாளரும், ஆலய பரிபாலகருமான ஸ்ரீகிருஷ;ணானந்த சர்மாவும், செயற்குழு உறுப்பினராக மேலும் ஐவரும் விளங்குகின்றனர். இச்சபை அன்னாரது நினைவாக யாழ் பல்கலைக்கழகத்தில் வருடம் தோறும் நினைவுப் பேருரை நிகழ்த்துவதற்கும், அங்கு இந்து நாகரீகம், சமஸ்கிரும், இந்துத் தத்துவம் ஆகிய பாடங்களில் சிறப்புக்கலையில் திறமைச்சித்தி பெறும் மாணவருக்கு புலமைப்பரிசில் வழங்கவும் உரிய நிதியை வழங்கியுள்ளதுடன், அன்னாரின் நினைவாக இதுவரை பதின்மூன்று நூல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆத்துடன் 2001, 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் நினைவுரைகளும் நடாத்தப்பட்டுள்ளது.

நல்லூர் சிவன் ஆலயமும் நூல் நிலையமும்இவ்வாலயத்தின் ஆகம நூலகத்தில் மிக அருமையாக அரிதான நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ஸ்தாபகரது காலத்து நூல்கள் என பல பிரிவிகளில் உள்ள இவை சமய அறிவு விருத்திக்குப் பெரிதும் உதவி வருகின்றன. இவ்வலாயத்தில் இயங்கி வந்த சோதிட நிலையம் மிகவும்; பிரசித்தி பெற்றது. இத்துறையின் வளர்ச்சிக்கென பல அரிதான நூல்கள் இங்கு உள்ளன. குருக்கள் அவர்களைத் தொடர்ந்து பிரம்மஸ்ரீ சி.சாம்பசிவக் குருக்கள் அவர்கள் இந்நிலையத்தை நிர்வகித்து வந்தார். ஆதனைத் தொடர்ந்து, நீண்ட காலமாக குருக்கள் அவர்களின் இளைய புத்திரர் பிரம்மஸ்ரீ இரத்தின கைலாசநாதக் குருக்கள் அவர்கள் அதனைப் பொறுப்பேற்று நடாத்தி வந்தார். சோதிட சாஸ்திரம் தொடர்பான சகல தேவைகளையும் பொதுமக்கள் இந்நிலையத்தின் மூலம் நிறைவு செய்து கொள்ளக்கூடிய தாகவிருந்தது. தற்பொழுது இந்நிலையம் ஆலய பரிபாலகரது பொறுப்பில் உள்ளது.
முடிவுரைஇவ்வாறாக, நல்லூர் கைலாசநாதர் கோயில் யாழ்ப்பாணத்தரசர்கால கைலாசநாதர் கோவிலின் சின்னமாக கருதப்படத்தக்க வகையில் பண்பாட்டின் வளர்ச்சிக்கு அரிய பணியாற்றி வருகின்றது. ஆலய தாபகர் கார்த்திகேயக் குருக்கள் அவர்களது தரும சாதனத்தின் வழிப்படியும் அவரது புத்திரர்கள் ஓய்வுபெற்ற முதுநிலைப் பேராசிரியர் இலக்கிய கலாநிதி, அமரர், பிரம்மஸ்ரீ கா.கைலாசநாதக்குருக்கள் மற்றும் பிரம்மஸ்ரீ இரத்தின கைலாசநாதக்குருக்கள் ஆகியோரால் பேணிவரப்பட்ட மரபுப்படியும் தற்போதைய பரிபாலகர் கிருஷ;ணானந்தசர்மா அவர்களால் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக பராமரிக்கப்பட்டு வருகின்ற இவ்வாலயம் நல்லூரில் சிறந்ததொரு சமய நிறுவனமாக விளங்கி இந்துப் பண்பாட்டின் வளர்ச்சிக்கு அரும்பெரும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.